டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் முறைகேடு நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று தேர்வு வாரிய செயலர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்..
டி.என்.பி.எஸ்.சி குரூப்-2வில் செய்யப்பட்டுள்ள மாற்றம் குறித்து தேர்வு வாரிய செயலாளர் நந்தகுமார் மற்றும் சுதன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். இதில் பேசிய அவர்கள் எழுத்து தேர்வு எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளி பருவத்தில் மாணவர்கள் பயின்றவற்றையே கேள்வியாக கேட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதனால் மாணவர்கள் எந்தவித முன் தயாரிப்பு இல்லாமல் தேர்வு எழுத முடியும் என்று விளக்கம் அளித்த அவர்கள், டிஎன்பிஎஸ்சி. தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை எனக் கூறினர்..