சம்பா சாகுபடிக்கு தேவையான அனைத்து விதைகளும் போதுமான அளவிற்கு கையிருப்பில் உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் அருகே ஓகைப்பேரையூர், நாகராஜன் கோட்டகம், கலியமங்கலம் இடையே வெள்ளாற்றின் குறுக்கே ரூபாய் 1 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பில் பாலம் அமைக்கும் பணியை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்டம் முழுவதும் 39 பாலங்கள் கட்டப்படுவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். சம்பா சாகுபடிக்கு தேவையான அனைத்து விதைகளும் போதுமான அளவிற்கு கையிருப்பில் உள்ளதாக குறிப்பிட்டார். விவசாயிகள் தேவையான அளவிற்கு விதைகளை வேளாண் விற்பணை கிடங்குகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.