திருத்துறைப்பூண்டி ஏராளமானஆதார் அட்டைகள் கேட்பாரற்று கிடப்பதாக தகவல்

திருத்துறைப்பூண்டியில் ஆற்றோரத்தில் கேட்பாரற்று கிடந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முள்ளி ஆற்றின் கரையோரத்தில் ஏராளமானஆதார் அட்டைகள் கேட்பாரற்று கிடப்பதாக தகவல் வெளியானது. அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆதார் அட்டைகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆதார் அட்டைகள் கட்டிமேடு, ஆதிரங்கம், வடபாதி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் உடையது என கூறப்படுகிறது.

Exit mobile version