அதிமுகவில் இணைந்த 500க்கும் மேற்பட்ட அமமுகவினர்

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட அமமுக நிர்வாகிகள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

டிடிவி தினகரன் தலைமை மீதான அதிருப்தியாலும், அவநம்பிக்கையின் காரணமாகவும் அமமுகவில் இருக்கும் நிர்வாகிகள் தொடர்ந்து தாய்க்கழகமான அதிமுகவில் மீண்டும் இணைந்த வண்ணம் உள்ளனர். இந்தநிலையில், இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் அவரை சந்தித்த அவர்கள், அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர் உள்ளிட்ட பலர் அப்போது உடனிருந்தனர்.

Exit mobile version