பொறியியல் பட்டப் படிப்புகளில் சேர இதுவரை 1 லட்சத்து 7 ஆயிரத்து 62 மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த 2 ஆம் தேதி ஆன்லைனில் துவங்கப்பட்டன. பி.இ , பி.டெக் படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில், இதுவரை 1 லட்சத்து 7 ஆயிரத்து 62 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் பட்டப் படிப்பில் சேர பொதுப் பிரிவினர் 500 ரூபாயையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 250 ரூபாயையும் கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை தொடர்ந்து சான்றிதழ்கள் ஜூன் 6 ஆம் தேதி முதல் 11 தேதி வரை சரிபார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 17 ஆம் தேதி மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.