தேனி மக்களவை, ஆண்டிபட்டி சட்டமன்ற அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

அதிமுக கூட்டணி கட்சியினரிடையே நாடாளுமன்ற, சட்டமன்ற வேட்பாளர்களை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறிமுகம் செய்து வைத்தார். தேனி நாடாளுமன்றம் மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்த அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கூடலூர் நகராட்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டார்.

தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் லோகிராஜனை அமைச்சர் உதயகுமார் அறிமுகம் செய்து வைத்தார்.

Exit mobile version