தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நேரிட்ட தீ விபத்தில், தூய்மைப் பணிக்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் எரிந்து சேதமாகின.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பராமரிப்பு பணியில் ஈடுபடும் தனியார் ஏஜென்சியின் பொருட்கள் வைக்கும் அறையில் திடீரென தீப்பற்றியது. இதில் மருத்துவமனை தூய்மை பணிக்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் எரிந்து சேதமாகின. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இரவு பெய்த பலத்த மழை காரணமாக மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தின் போது உள்நோயாளிகள் பிரிவில் இருந்த சுமார் 10க்கும் மேற்பட்ட நோயாளிகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.