முல்லை பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தொடர்ந்து 90வது நாளாக நீர் திறக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் முல்லை பெரியாறு அணையில் இருந்து ஆண்டுக்கு 9 நாட்கள் பாசனத்திற்காக நீர் திறக்கப்படும். அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி 18ஆம் கால்வாய் வழியாக பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது. வழக்கத்திற்கு மாராக இந்த ஆண்டு தொடர்ந்து 90வது நாளாக நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் தேவைக்கு ஏற்ப தண்ணீர் கிடைத்ததால் பெரியாறு அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. எனவே, தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.