தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்

தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் மக்களவை, இடைத்தேர்தலுக்கான பிரசாரம் களை கட்டி உள்ளது. வேட்பு மனு தாக்கலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ரவீந்திரநாத் குமார் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தேனி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பல்லவி பல்தேவ் முன்னிலையில் அவர் வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.

Exit mobile version