இலங்கைல் அரசு கொண்டுவரவுள்ள பயங்கரவாத ஒழிப்புச் சட்டம் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்யப்படும் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே தெரிவித்துள்ளார்
இலங்கைத் தலைநகர் கொழும்புவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே ரகசியமாக இந்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயற்சி செய்திருப்பதாக தெரிவித்தார். மசோதாவைத் தோற்கடிக்க தங்கள் கட்சி தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். ஒருவேளை ரணில் அரசு இந்தச் சட்டத்தை நிறைவேற்றினாலும் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த மசோதா ரத்து செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.