கஜா புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினரிடம் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிந்துபோய்விட்டதாக கூறி மக்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. தென்னை, மா, பலா உள்ளிட்ட மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளது. ஆயிரக்கணக்கான குடிசை வீடுகள் முழுவதுமாக சேதமடைந்திருப்பதால் தங்க இடமின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் புயல் சேதங்களை ஆய்வு செய்ய வந்த மத்தியக் குழுவினர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதிப்பு நிலவரங்களை பார்வையிட்டனர். மக்களை சந்தித்த மத்தியக் குழுவினரிடம் மக்கள் கண்ணீருடன் கோரிக்கைகளை முன்வைத்தனர். ஒரேநாளில் தங்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டதாக வேதனை தெரிவித்தனர்.