தனியார் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க உதவுவதுபோல் திருட்டு

கடலூர் அருகே தனியார் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுத்து தருவதுபோல, பொதுமக்களிடம் நூதன திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதிமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் அருகே பிள்ளைபாளையத்தைச் சேர்ந்த சிறுவன் தினேஷ் மற்றும் அவரது தயார், குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் வங்கியில் ஏ.டி.எம்மில் பணம் எடுக்க சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பணம் எடுப்பது தெரியாமல் திகைத்து நின்றதாக தெரிகிறது. இதனை கவனித்த, அடையாளம் தெரியாத நபர், ஏ.டி.எம் கார்டை பெற்று சொருகச்சொல்லி, அவர்களது ரகசிய எண்ணை கேட்டு, 4000 ரூபாய் குடும்பச் செலவுக்கு எடுத்துக்கொடுத்துள்ளார்.

ரகசிய எண்ணை நன்கு தெரிந்துகொண்டு மர்மநபர், மீண்டும் ஒருமுறை ஏ.டி.எம் கார்டை இயந்திரத்தில் சொருகிவிட்டு, செல்லுங்கள் எனவும் தினேஷிடம் கூறியுள்ளார். உதவி செய்தவர் சொன்னால் சரியாக இருக்கும் என அவ்வாறே செய்துவிட்டு, வீட்டுக்குச் சென்றபோது, 10 ஆயிரம் ரூபாயை மர்ம நபர் திருடிச்சென்றது அவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து தினேஷின் தந்தை விஜயகுமார் குறிஞ்சிப்பாடி காவல்நிலையத்தில் செய்ததின் அடிப்படையில், போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version