திருவள்ளூர் அருகே ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில், ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் வர்மா வசித்து வருகிறார். மனைவிக்கு உடல் நலம் சரியில்லாததை அடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தார். இந்தநிலையில், வீடு திரும்பிய சர்மா, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, 60 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் அளித்த புகாரை தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.