கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், பூட்டிய வீட்டின் கதவை உடைத்த மர்மநபர்கள், 24 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் இடலாக்குடி சந்திதெரு பகுதியை சேர்ந்த ஷேக் முகமது வெளிநாட்டில் வேலை பார்த்துவரும் நிலையில், இவரது மனைவி அஜாரா, வீட்டை பூட்டிவிட்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றிருந்தார். அவர் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு, 24 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, கோட்டார் போலீசாருக்கு தகவல் அளித்ததில், சம்பவ இடத்திற்க வந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.