மேட்டுப்பாளையத்தில் பழமையான அந்தோணியார் ஆலயத்தின் தேர்த்திருவிழா

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் 50 ஆண்டுகள் பழமையான புனித அந்தோணியார் ஆலயத்தின் தேர்த்திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒரு வாரகாலமாக காலை மற்றும் மாலை வேளைகளில் புனித திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அந்தோணியார் எழுந்தருள, பங்குதந்தை ரொசாரியோ சிறப்பு பூஜைகள் செய்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். ஆலயத்தில் இருந்து துவங்கிய தேர், மேட்டுப்பாளையத்தின் முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version