சென்னை மெரினா கடற்கரையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர் கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்தில் சிக்கி பலியானார்.
பட்டாளத்தை சேர்ந்த சாந்தகுமார் என்ற இளைஞர், சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலையிலிருந்து உழைப்பாளர் சிலை வரை இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளார். சாரணர் பயிற்சி மையம் அருகே வந்த போது முன்னால் சென்ற வாகனங்களை முந்தி செல்ல முயன்றுள்ளார். அதிவேகமாக சென்ற அவரது பைக், வளைந்து நெளிந்து தாறுமாறாக ஓடியது. அப்போது எதிர்பாராதவிதமாக அவரது வாகனம் விபத்தில் சிக்கியது. இதில் கீழே விழுந்த சாந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் வாகன ஓட்டிகள் சிலரும் காயமடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சாந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.