ஆசையாக வாங்கிய காரை ஹெலிகாப்டர் கொண்டு நொறுக்கிய இளைஞர்

ரஷ்யாவில் தான் ஆசை ஆசையாக வாங்கிய காரை இளைஞர் ஒருவர் ஹெலிகாப்டர் கொண்டு நொறுக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஷ்யாவை சேர்ந்த இகோர் மொரோஸ் என்ற இளைஞர் Youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தான் சம்பாதித்த பணத்தை கொண்டு  சமீபத்தில் ஆசையாக மெர்சிடிஸ் எஸ்.யூ.வி காரை வாங்கினார்.

ஆனால் கார் இவரை உரிமையாளராக ஏற்கவில்லை போல… அதனை ஒட்டி பார்த்தபோது அதில் அடுத்தடுத்து கோளாறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் தனது பொறுமையை இழந்த இகோர் காரை உடைத்து விட முடிவு செய்தார்.

இதனைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் ஒன்றை ஏற்பாடு செய்து அதில் காரை கட்டி 1000 அடி உயரத்தில் இருந்து கீழே விழுமாறு ஏற்பாடு செய்தார். இதல் கார் விழுந்து நொறுங்கியது. ரூ.2 கோடி மதிப்புள்ள ஒரு காரை அது கொடுத்த தொல்லையினால் உடைத்த இகோர் அதனை முழு வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version