பொங்கல் பண்டியையொட்டி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள மஞ்சள் கொத்துக்கள்

பொங்கல் பண்டியையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் மஞ்சள் கொத்துக்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளன. பொங்கலுக்குத் தேவையான மஞ்சள் கொத்துக்கள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, மஞ்சள் பட்டிணம் ஆகிய ஊர்களில் ஆண்டுதோறும் பயிரிடப்படுவது வழக்கம்.

பொங்கல் பானையில் கட்டுவதற்காக பூஜையில் வைக்கப்படும் இந்த மஞ்சள் கொத்துக்கள், இந்த ஆண்டும் விளைந்து விற்பனைக்குத் தயாராகவுள்ளது. இந்தநிலையில் மஞ்சள் கொத்துக்கான விலையை உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version