உலகின் மிகப்பெரிய வெள்ளை நிற முதலைகள் ஒடிசாவின் பிதர்கன்னிகா தேசிய வனவிலங்கு பூங்காவில் காணப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர்.
ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் பிதர்கன்னிகா தேசிய வனவிலங்கு பூங்கா அமைந்துள்ளது. இந்தியாவிலேயே 2வது மிகப் பெரிய சதுப்பு நில சூழியலமைக்களை உள்ளடக்கிய இந்த பூங்கா, உவர்ப்பு நீர் முதலைகள், ராஜநாகம், ஐபிஎஸ் பறவை ஆகியவற்றின் தொட்டிலாக திகழ்ந்து வருகிறது. 1700க்கும் மேற்பட்ட முதலைகள், 5000க்கும் மேற்பட்ட மான்கள் இங்கு உள்ளன. மேலும், உலகின் மிகப்பெரிய வெள்ளைநிற முதலைகளும் இங்கு காணப்படுவதால், சுற்றுலா பயணிகள் ஆர்வமுடம் இந்த வனவிலங்கு பூங்காவுக்கு வருகை புரிகின்றனர்.