உலகின் முதல் 32mp POP-UP செல்ஃபி கேமரா

உலகின் முதல்முறையாக 32mp பாப்-அப் செல்ஃபி கேமராவுடன் கூடிய ஸ்மார்ட்போனை vivo நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

சீனாவின் முன்னணி நிறுவனமான vivo வரும் 20-ந் தேதி அன்று vivo v15 pro என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இது தொடர்பாக ஒரு வீடியோ-வை vivo நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் செல்ஃபிக்கென புதிதாக பாப்-அப் என்ற கேமரா உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் எவ்வளவோ பாப்-அப் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் வெளிவந்தாலும், உலகில் முதன்முறையாக vivo v15 pro-வில் Selfie Cam 32 மெகா பிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இது தான். Display fingerprint sensor-ரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போனில் 48MP, 8MP, 5MP என வெவ்வேறு பிக்சல்கள் மூன்று பின்புற camera-க்களில் உள்ளதால், மிகத் தெளிவாக அனைத்து புகைப்படங்களையும் எடுக்கலாம். இந்த போனின் displayஅளவு 6.61(inch). 6GB RAM, 128GB ROM, 3400mAh Battery போன்ற சிறப்பம்சங்களை கொண்டது. வரும் 20ம் தேதி உலகம் முழுவதும் விற்பனைக்கு வரும் நிலையில், ஆன்லைனில் இதன் விலை 25,990 ரூபாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version