உலகபுகழ்பெற்ற கேதார்நாத் கோயில் இன்று திறப்பு

6 மாதங்களுக்கு பிறகு கேதார்நாத் கோயில் பக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. கோயிலில் தரிசனம் செய்வதற்காக திரளான பக்தர்கள் குவிந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள லிங்கம் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் மே மாதம் முதல்வாரத்தில் அக்ஷய திருதியையையொட்டி இந்தக் கோயில் திறக்கப்படுகிறது. 6 மாதங்கள் பக்தர்களின் வழிபாட்டிற்காக திறக்கப்படும் இந்த கோயில் அக்டோபர் மாதத்தில் மீண்டும் மூடப்படும். அக்டோபர் மாதத்தில் இருந்து பனியால் இந்தக் கோயில் சூழப்படும். அந்த காலகட்டத்தில் லிங்கம் உக்கிமத் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் 6 மாத காலத்திற்கு பிறகு கேதார்நாத் கோயில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் திறக்கப்பட்டுள்ளது. லிங்கத்தை தரிசிப்பதற்காக இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர். இன்று திறக்கப்பட்டுள்ள கேதார்நாத் கோயில் வரும் அக்டோபர் 29ம் தேதி மீண்டும் மூடப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version