விராலிமலையில் நடந்த கின்னஸ் உலக சாதனை ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஆயிரத்து 353 காளைகள் சீறிப்பாய்ந்தன.
உலக சாதனை முயற்சியாக, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முதலமைச்சர் பழனிசாமி போட்டியை துவக்கி வைத்தார். பின்னர் வாடிவாசல் வழியே ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளின் திமிலை பிடித்து வீரர்கள் அடக்க முயன்றனர். ஆனால், காளைகள் அவர்களுக்கு சவால் விட்டது.வெற்றிபெற்ற வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், தங்ககாசு, மெடல் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. 21 காளைகளை அடக்கிய முருகானந்தம் என்ற இளைஞர், முதல் பரிசான காரை தட்டிச்சென்றார். போட்டி முடிவில் ஆயிரத்து 353 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது தெரியவந்தது. இந்த ஜல்லிக்கட்டு உலக சாதனை படைத்தாக, கின்னஸ் உலக சாதனை கூட்டமைப்பு சார்பில் லண்டனில் இருந்து வந்த மார்க், மெலனே ஆகியோர் அறிவித்து சான்றிதழ் வழங்கினர்.