மூழ்கும் அபாயத்தில் உலகம்… ஆய்வு தரும் அதிர்ச்சி தகவல்…

உலகம் வெப்பமயமாதல் குறித்து அண்மையில் இங்கிலாந்திலுள்ள ஒரு தனியார் அமைப்பு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள் நம்மளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், புவி வெப்பமயமாதலின் விளைவுகள் குறித்து ஐ.நாவின் ஒரு அங்கமான அரசுகளிடைக் குழு (IPCC) அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடரும் பருவ நிலை மாற்றம் காரணமாக வெப்பநிலை உயர்ந்து, வருங்கால தட்ப வெட்ப நிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு மனிதர்கள் தங்களை மாற்றி அமைத்துக்கொள்ள சிரமப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தட்பவெட்ப நிலை மாற்றம் காரணமாக கடல் மட்டம் உயர்வதற்கும், வடதுருவத்தில் பனியளவு குறைவதற்கும் ஆதாரங்கள் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் carbon dioxide, greenhouse gases அதிகரிப்பே புவியின் அதிகரித்த வெப்பத்திற்கு காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாற்றம் இயற்கையாலும், மனிதனால் அதிக அளவில் பயன்படுத்தப்படும் பைங்குடில் வளிமங்களாலும்(Methane,nitrox axide,chloro-floro-carbon) ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக கடல் நீர் மட்டம் உயர்கிறது. இந்நிலை தொடர்ந்தால், உலகக் கடல்களின் நீர் மட்டம் மேலும் 7m வரை உயரலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதை விட பெரும் ஆபத்தாகக் காணப்படுவது கீரீன்லாந்து தீவின் மீதிருக்கும் இராட்சதப் பனிக்கட்டிப்படலம் உருகத் தொடங்கி உலகக் கடல்களின் நீர் மட்டம் உயரலாம். அதே போல் அண்டார்டிகாவிலுள்ள பனிக்கட்டிப்பாறைகளும் உருக தொடங்கும்.

இன்னும் 500 வருடங்களில் கடல் மட்டம் 7 – 13 மீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவ்வாறு நடந்தால் உலகின் பல பகுதிகள் கடலில் மூழ்கிவிடும் ஆபத்து இருக்கிறது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெப்பநிலை அதிகரிக்கும் நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. கடந்த 150 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இந்தியாவில் அதிக வெப்பநிலை நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த காலங்களை விட அதிக வெப்பநிலையை நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் உச்சமாக வெப்பநிலை நிலவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கத்திற்கு மாறாக இம்முறை பிப்ரவரி மாதத்திலேயே தமிழகத்தில் அதிக வெப்பநிலை நிலவியது. இவ்வாறு பல ஆபத்துக்கள் ஏற்படுத்தும் வெப்பநிலை அதிகரிப்பதற்கான காரணமாக உள்ள உலக நாடுகள் அனைத்தும், தற்போது அந்த ஆபத்தை தடுக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Exit mobile version