டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் குறித்த உலகளாவிய ஆய்வுக்கு முன் வந்துள்ளது.

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக சீனா மீது தொடர் குற்றசாட்டுகளை கூறி வந்த நிலையில், சீனா மீது சர்வேதேச விசாரணை நடத்தவும் உலக சுகாதார அமைப்பை வலியுறுத்தினார். மேலும், 30 நாட்களுக்குள் இது குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் உலக சுகாதார அமைப்பிற்கு கொடுக்கும் நிதியை ரத்து செய்ய போவதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் ஆண்டு கூட்டம் ஜெனிவாவில் நடைபெற்றது. இதில், ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த அந்த அமைப்பின் உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் தொடர்பாக உலகளாவிய ஆய்வுக்கு ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் ட்ரம்பின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள உலக சுகாதார நிறுவனம், அமெரிக்காவில் நிலவும் நெருக்கடியை திசை திருப்புவதற்காகவே ட்ரம்ப் இது போன்ற குற்றசாட்டுகளை கூறிவருவதாகவும், தொடர் விமர்சனங்கள் மூலம் உலக சுகாதார அமைப்பை கட்டுப்படுத்த ட்ரம்ப் நினைப்பதாகவும், தெரிவித்துள்ளது. மேலும், ட்ரம்ப் சர்வதேச அளவிலான வைரஸ் தடுப்பு பணிகளை உதாசீனப்படுத்துவது போன்று செயல்படுவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

Exit mobile version