பிரிட்டன், அமெரிக்கா, குவைத் ஆகிய நாடுகள் அனுப்பி வைத்த நிவாரண மருத்துவ உபகரணங்கள் டெல்லிக்கு வந்தடைந்தன.
பிரதமர் நரேந்திர மோடியும், பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் நடத்திய காணொலி உரையாடலை அடுத்து இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தயார் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில், 300 டன் எடை கொண்ட கோவிட் நிவாரணப் பொருட்கள் பல்வேறு நாடுகளில் இருந்து 25 விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டு, டெல்லி வந்துள்ளன.
இந்த நிலையில், பிரிட்டன் அரசு நான்காவது தவணையாக அனுப்பி வைத்த நிவாரண மருத்துவ உபகரணங்கள் டெல்லிக்கு வந்தடைந்தன.
இதில், 495 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 200 வெண்டிலேட்டர்கள் போன்ற உயிர் காக்கும் மருந்துப் பொருட்கள் உள்ளன.
இதே போல், குவைத் அரசு அனுப்பி வைத்த 282 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 60 ஆக்சிஜன் செறிவூட்டிகள், வெண்டிலேட்டர்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் டெல்லிக்கு வந்தடைந்தன.
அமெரிக்கா நான்காவது தவணையாக அனுப்பி வைத்த ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகளும் விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்தன.