உலகப் புகழ்பெற்ற கானாடுகாத்தான் செட்டிநாடு அரண்மனை

தமிழ்நாட்டின் கட்டிடக் கலையில் பலவகை இருந்தாலும் செட்டிநாடு வீடுகளின் கட்டிடக் கலை உலகப் புகழ்பெற்றவை. அந்த வகையில் கானாடுகாத்தான் அரண்மனை பற்றிய சிறப்பு தொகுப்பை தற்போது பார்க்கலாம்…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ளது கானாடுகாத்தான் கிராமம். இங்கு ராஜா அண்ணாமலை செட்டியாரால் வடிவமைக்கப்பட்ட அரண்மனை வீடு பல திரைப்படங்களில் கண்டிருப்போம். அந்த வீடு தான் கானாடுகாத்தான் மாளிகை. காரைக்குடி செட்டியார்களின் கலையம்சத்துடன் கோட்டைபோல் கட்டப்பட்ட வீடுகள் தான் அது.. கானாடுகாத்தான் மட்டுமல்லாது அருகிலுள்ள கோட்டையூர், காரைக்குடி, செட்டிநாடு ஆகிய ஊர்களிலும் இதே போன்ற பிரமாண்டமான வீடுகளைப் பார்க்கலாம்.

செட்டிநாடு வீடுகளின் கட்டிடக் கலை உலகப் புகழ்பெற்றவை. செட்டியார்கள் தங்கள் வீட்டு விசேஷங்களையும் வீட்டிலேயே நடத்துவதை வழக்கமாகக் கொண்டவர்கள். அதனால் வீடே பெரிய மண்டபம்போல் இருக்கும். இந்தக் கட்டிடக் கலை குறித்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர்கள் ஆய்வுசெய்துள்ளனர். இன்று வரை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து வியந்து செல்கிறனர்.

இந்த அரண்மணை வீடுகளில் குறைந்தது முப்பது அறைகள் வரை இருக்கும். வீட்டின் முன்புறம் அனைவரையும் வரவேற்கும் வகையில் நுழைவு வாசலின் இருபுறமும் விசாலானமான திண்ணை, கம்பீரமான மரத் தூண்கள் பண்பாட்டு அடையாளமாகவே காணப்படுகிறது. பர்மா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட தேக்கு மரப் பலகையில் செய்யப்பட்ட கதவுகளும் ஜன்னல்களும் இன்றும் செட்டியார்களின் கலையம்சத்தை உணர்த்துகின்றன.

மனிதர்கள் வாழும் வீடுகள் மட்டுமல்ல அதையும் தாண்டி தமிழ்நாட்டின் கட்டிடக்கலையின் அடையாளங்களாக இன்னும் பலநூறாண்டுகள் நிலைக்ககூடியவயாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்…

Exit mobile version