2019-20ல் இந்திய பொருளாதாரம் 7.5% வளர்ச்சியை எட்டும் உலக வங்கி கணிப்பு

2019-20ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7.5% வளர்ச்சியை எட்டும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது

இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019 ஏப்ரல் 1ம் தேதி முதல் 2020 மார்ச் 31ம் தேதி வரையிலான காலகட்டத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில், இதே அளவு தான் பொருளாதார வளர்ச்சி இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரு நிதியாண்டுகளுக்கும் 7.5 சதவீத பொருளாதார வளர்ச்சியே நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. வட்டி விகிதம் தளர்வு, பணவீக்கம் குறைவு போன்ற காரணங்களால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version