கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு பகுதியில் அணைக்கட்டு வாய்க்கால் வடிகால் மதகு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விருத்தாசலம் அருகில் உள்ள குமாரமங்கலம் அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்கு செல்லும் 22 கிலோ மீட்டர் நீளமுள்ள வாய்க்கால் சென்று சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு அருகே உள்ள வடக்குராஜன் வாய்க்காலில் இணைகிறது. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த வாய்க்காலின் வடிகால் பகுதியின் ஷட்டர் மதகு மிகவும் பலவீனமாக இருந்ததால் இதனை மாற்றி புதியதாக அமைத்திட பொதுப்பணித்துறை மூலம் 5 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் பிரிவில் புதிய வடிகால் மதகு கட்டபட்டு வருகிறது.
அதற்கான பணிகள் தற்போது முழுமூச்சாக நடைபெற்று வருகிறது. இந்த வடிகால் ஷட்டர் மதகால் விவசாயத்திற்கு தேவைப்படும் தண்ணீரை மற்றப் பகுதிகளுக்கு சேதமில்லாமல் கொண்டு செல்வதற்கும், சிக்கனமாகவும் பயன்படுத்தமுடியும் என இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.