காரப்பாடி மலைக்கிராமத்தில் மின்கம்பங்கள் அமைக்கும் பணி: எம்.எல்.ஏ நேரில் ஆய்வு

காரப்பாடி மலைக் கிராமத்தில் நடைபெற்று வரும் 172 மின்கம்பங்கள் அமைக்கும் பணியினை, அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் நேரில் ஆய்வு செய்தார்.

தர்மபுரி மாவட்டம் காரப்பாடி கிராமத்தில், சுமார் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த மலைக் கிராமத்திற்கு, 60 ஆண்டு காலமாக மின்சாரம் வசதி இல்லாமல் இருந்ததைத் தொடர்ந்து, அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமாரின் முயற்சியால், 33 லட்சத்து 32 ஆயிரத்து 209 ரூபாய் மதிப்பீட்டில், 172 மின்கம்பங்கள், ஒரு டிரான்ஸ்ஃபார்மர், 2 டி.பி சுவிட்ச்பாக்ஸ், அமைக்கப்பட்ட உள்ளது. தற்போது 72 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், தொடர்ந்து நடைபெற்று வரும் பணிகளை, சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார்.

Exit mobile version