சீனாவில் தன் காதலை வெளிப்படுத்த காதலனுக்கு பெண் ஒருவர் BMW கார், வீடு ஆகியவற்றை பரிசாக கொடுத்து அசத்தியுள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சீனாவைச் சேர்ந்த ஸியாவ்ஜிங் என்ற பெண், ஸியோக் என்ற நபரை சந்தித்தார். வழக்கம் போல நட்பில் தொடங்கி பின்னாளில் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆனால் முதல் சந்திப்பிற்கு பிறகு அவர்கள் சந்திக்கவும் இல்லை. இருவருமே தங்கள் காதலை வெளிப்படுத்தவும் இல்லை. போன் மூலமாக மட்டுமே தங்களது உறவை தொடர்ந்து வந்தனர்.
இதற்கிடையில் மீண்டும் இருவரும் சந்திக்க விரும்பி முதன்முதலில் சந்தித்த இடத்தையும், நாளை தேர்வு செய்தனர். இதற்காக சந்திப்பு நடைபெறும் இடத்தில் ஸியாவ்ஜிங் அலங்காரம் செய்து ஸியோக்கிற்கு இன்ப அதிர்ச்சியளித்தார்.
மேலும் மணப்பெண் உடையில் வந்த ஸியாவ்ஜிங் கையில் பூங்கொத்துடன் அங்கு போடப்பட்டிருந்த மேடையில் தன் காதலை வெளிப்படுத்தினார். அவரது பூங்கொத்தை வாங்கி காதலை ஏற்றுக்கொண்ட ஸியோக்கிற்கு அதில் ஒரு பரிசு காத்திருந்தது.
ஒரு BMW கார் சாவியும், வீட்டு பத்திரமும் அதில் பரிசாக இருந்தது. காதலை வெளிப்படுத்த காதலனுக்கு கார், வீடு பரிசாக கொடுக்கப்பட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.