ஐந்து பிள்ளைகளுக்கு தாயான ஒருவர் நாள் ஒன்றுக்கு 200 கிராம் டால்கம் பவுடரை தின்று தீர்ப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது .
பிரித்தானியா நாட்டைச் சேர்ந்த 44 வயதான லிசா என்ற பெண்மணி ஒரு விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.. 5 பிள்ளைகளுக்கு தாயான லிசா 30 நிமிடங்களுக்கு ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமாக டால்கம் பவுடர் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இவர் கடந்த 15 ஆண்டுகளாக சுமார் 8,000 பவுண்ட் தொகையை டால்கம் பவுடர் சாப்பிடுவதற்காகவே செலவிட்டு வந்துள்ளார் என கூறப்படுகிறது.. இந்நிலையில் 10 ஆண்டுகளாக தனது இந்த விசித்திர பழக்கத்தை ரகசியமாக வைத்துள்ள லீசா ஒருமுறை இரவில் குளியலறைக்கு சென்று பவுடர் சாப்பிடுவதை கணவர் கண்டறிந்துள்ளார். இதன்பின்பு லிசா மருத்துவ நிபுணர்களின் உதவியை நாடியுள்ளார்.. அங்கு மருத்துவர்கள் தரப்பில் உணவில்லாத பொருட்கள் மீதான ஈர்ப்பு சம்பந்தப்பட்ட நோய் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
இதனை அடுத்து டால்கம் பவுடர் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதாலும் சுவாசிப்பதாலும் உடம்புக்கு தீங்கு விளைவிக்கும் என குறிப்பிடும் நிலையில் லிசாவுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் மருத்துவ தரப்பில் கூறியுள்ளனர். மேலும் விசா சாப்பிடும் டால்கம் பவுடர்களிலே தனக்குப் பிடித்த டால்கம் பவுடர் குழந்தைகளுக்கான ஜான்சன்ஸ் பவுடர் எனவும் கூறியுள்ளார்.