பெண்ணை கவ்விய ஆக்டோபஸ் – வைரலாகும் வீடியோ

உயிருடன் உள்ள ஆக்டோபஸை பெண் ஒருவர் சாப்பிட முயன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

சீனாவை சார்ந்த பெண் ஒருவர் விதவிதமான உணவுகளை விரும்பி சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டுள்ளார். அவர் சாப்பிடும் போது அதனை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டும் வந்துள்ளார். இந்நிலையில் தனது அடுத்த முயற்சியாக அவர், உயிருடன் இருந்த ஆக்டோபஸை சாப்பிட தயாரானார். முகம் முழுக்க ஆக்டோபஸை படர விட்டு அதனை அந்த பெண் சாப்பிட முயன்ற போது திடீரென அவர் அலறினார். எதிர்பாராத விதமாக அந்த பெண்ணின் கன்னங்களை ஆக்டோபஸ் தனது கால்களால் பற்றிக்கொண்டது. இதில் அந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது.

ஆக்டோபஸ் கால்களால் இரையை கவ்விக்கொள்ளும் பழக்கமுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version