கர்நாடக எல்லையான பண்டிப்பூர் வனவிலங்கு சரணாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த காட்டுத் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் தேசிய பூங்கா ஆகிய இரு வனப்பகுதியில் சில தினங்களுக்குமுன்பு பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது . இந்த காட்டுத் தீயால் பந்திப்பூர் தேசியப் பூங்காவில் 45,000 ஹெக்டேர் அளவுக்கு வனப் பகுதிகள் எரிந்து சாம்பலாகின. மேலும் இந்த தீவிபத்தில் சிக்கி ஏராளமான வனவிலங்குகள், மூலிகை செடிகள், மரங்கள் தீயில் எரிந்து கருகின. இதையடுத்து, 300க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையின் தீவிர முயற்சியால், கடந்த 4 நாட்களாக நீடித்துவந்த காட்டுத்தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இதனை, குண்டல்பெட் சட்டமன்ற உறுப்பினர் நிரஞ்சன் குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.