மேட்டூர் அணையின் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரத்து 269 கனஅடியாக சரிந்துள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து சரிந்துள்ளது. நேற்று 6 ஆயிரத்து 334 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி 5 ஆயிரத்து 269 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 118.82 அடியாகவும், நீர் இருப்பு 91.601 டி.எம்.சியாகவும் உள்ளது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து, விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 700 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

Exit mobile version