பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான வடகேரளா மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 60.23 அடியாகவும், நீர் இருப்பு 7.3 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 

Exit mobile version