முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 4,318 கன அடியாக உயர்வு

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் வேகமாக அதிகரித்து வருகின்றது.

கடந்த 4 நாட்களாக தேனி மாவட்டம் தேக்கடி மற்றும் முல்லைப் பெரியாறு அணைப்பகுதிகளில், தொடர் கனமழை பெய்துவருவதால், முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு, 4 மடங்கு அதிகரித்து, 4 ஆயிரத்து 318 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து காணப்படுகிறது. நேற்று மட்டும் தேக்கடி பகுதிகளில் 85 மில்லி மீட்டரும், முல்லைப் பெரியாறு பகுதியில் 181 புள்ளி 6 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அணைப்பகுதிகளில் இன்றும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version