முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 11 கன அடியாக உள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 129 அடியாகக் குறைந்துள்ளது.
தேனி மாவட்டத்திலும் கேரளத்திலும் மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த சில வாரங்களாகக் கனமழை பெய்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கு நொடிக்கு 17ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 131 அடி வரை உயர்ந்தது. இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் நீர் வரத்து நொடிக்கு ஆயிரத்து 11 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து நொடிக்கு ஆயிரத்து எழுநூறு கன அடி நீர் தமிழகத்துக்குத் திறக்கப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 129 அடியாக உள்ளது.