காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்ததை அடுத்த, கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவும் குறைந்துள்ளது. இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு ஐயாயிரத்து 993 கன அடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93. 47 டி.எம்.சி யாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியிலிருந்து 4 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து 5 ஆயிரத்து 200 கனஅடியாக குறைந்துள்ளது. வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட சேதங்கள் இன்னும் சீரமைக்கப்படாதநிலையில், அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை 125-வது நாளாக தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.