மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரத்து 31 கனஅடியாக சரிந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததன் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரத்து 31 கனஅடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 700 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து அதிகளவு நீர் வெளியேற்றப்படுவதால் அணையின் நீர்மட்டம் 117 புள்ளி 60 அடியாகவும், நீர் இருப்பு 89 புள்ளி 69 டி.எம்.சியாகவும் குறைந்துள்ளது.