காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,290 கனஅடியாகச் சரிந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்றைய நிலவரப்படி 12 ஆயிரத்து 943 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 8 ஆயிரத்து 290 கனஅடியாகக் குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 114 புள்ளி 4 அடியாகவும், நீர் இருப்பு 84 புள்ளி 82 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 700 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்தைக் காட்டிலும் நீர்திறப்பு அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு அரை அடி வீதம் குறைந்து வருகிறது.