பொள்ளாச்சியை மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் மழை இல்லாததால் நீர் வரத்து குறைந்து வருவதால் ஆழியாறு அணையில் நீர்மட்டம் 71 அடி குறைந்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 120 அடி அளவு கொண்ட அணை ஆழியாறு அணை திகழ்கிறது. இந்த அணையில் இருந்து பாசனத்திற்காக சுமார் 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயனடைந்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் 120 அடியில் இருந்து 71 அடியாக தற்சமயம் குறைந்துள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு இன்னும் 5 மாதங்கள் உள்ள நிலையில் இந்த நீரினை குடிநீர் தேவைக்கு பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.