தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலில் காவிரி ஆற்றின் நீர்வரத்து தொடர்ந்து 400 கன அடியாக நீடிக்கிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் தாக்கம் குறைந்ததால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டது. இதனால், ஒகேனக்கல்லில் நீர் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக, ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவு, 4-வது நாளாக 400 கன அடியாக உள்ளது.
நீர்வரத்து குறைந்தபோதிலும், பிரதான அருவியில் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், முன்னெச்சரிக்கையாக, சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தொடர்ந்து 185-வது நாளாக தடை நீடிக்கிறது.