ஒகேனக்கலுக்கு வரும் நீர் வரத்து 1,800 கன அடியாக குறைவு

ஒகேனக்கலுக்கு வரும் நீர் வரத்து 1,800 கன அடியாக குறைந்தும், அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை152 நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால் ஒகேனக்கலுக்கு வரும் நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வரும் நீர் வரத்து ஆயிரத்து 800 கன அடியாக உள்ளது.

நீர்வரத்து குறைந்தும் அருவியில் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க முடியாத நிலை உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 152வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version