காஷ்மீரில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் கோவில்பட்டியை சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர் சுப்ரமணியன் வீரமரணம் அடைந்தார். இதனால் அவர் பிறந்த கிராமம் சோகக்கடலில் முழ்கியுள்ளது. தூத்துக்குடி அருகேயுள்ள சவலாபேரியை சேர்ந்த சுப்ரமணியன் என்ற சி.ஆர்.பி.எப் வீரர் தற்கொலைப் படை தாக்குதலில் பலியானார். இந்த நிலையில் அவர் பயின்ற பள்ளியில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
5 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்த இவர் உத்தர பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆகிறது. இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியாக திகழ்ந்த ஒருவரை இழந்து விட்டதாக கிராம மக்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.