5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை துவங்கியுள்ளது.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு தனித்தனியாக கடந்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், கடந்த வாரத்தில் தெலங்கானா மற்றும் ராஜஸ்தானில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த ஐந்து மாநிலங்களின் வாக்குப்பதிவு இன்று ஒரேகட்டமாக நடைபெறுகிறது. பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த 5 மாநிலங்களின் தேர்தல் கருதப்படுகிறது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலங்களில் ஆட்சியை தக்கவைக்க பாஜக தீவிர பிரசாரம் செய்தது. இதேபோல, பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது.

தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமீதியும் மிசோரமில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் உள்ளன.

இதனிடையே, ஐந்து மாநில தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியுள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியமைக்கப் போகும் கட்சி குறித்து இன்னும் சில மணிநேரங்களில் தெரியவரும்.

Exit mobile version