திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட அக்கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் இன்று பெறப்படுகின்றன. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் விருப்ப மனுக்களை பெற்று, அதனை பூர்த்தி செய்து தாக்கல் செய்கின்றனர். ஜனநாயக முறைப்படி வேட்பாளர் தேர்வு நடைபெறுவதால் காலை முதலே அதிமுகவினர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.