கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவில் உபரிநீர் திறந்து விடப்படுவதால் ஒகேனக்கல் வரும் நீரின் அளவு 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பருவமழையின் காரணமாக கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் தமிழகத்துக்கு சுமார் 10 ஆயிரம் கன அடி வரை உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கலில் நீரின் அளவானது 7 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.