குற்றால அருவிக்கு ஐயப்ப பக்தர்களின் வருகை குறைவு – வியாபாரிகள் வேதனை

தென்காசி குற்றாலம் அருவிக்கு ஐயப்ப பக்தர்கள் வருவது குறைந்ததால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் குற்றால அருவிகளில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலும் சீசன் அமோகமாக இருக்கும். இதேபோல், ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும்போது அல்லது சபரிமலையில் இருந்து திரும்பும்போது குற்றாலத்தில் நீராடி செல்வது வழக்கம். இந்நிலையில், சபரிமலையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவிவருவதால், குற்றால அருவிக்கு ஐயப்ப பக்தர்களின் வருகை குறைந்துள்ளது. இதனால் அதிகளவில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

 

Exit mobile version