ராமநாதபுரத்தில் இறந்து போன கோவில் காளையை மேள, தாளங்களுடன் கிராம மக்கள் அடக்கம் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே அழகர்மலையான் என்ற கோயில் உள்ளது . இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, தெய்வமாக காளை ஒன்றை வளர்த்து வழிபட்டு வந்துள்ளனர்.
வயது முதிர்வு காரணமாக கோயில் காளை இறந்துள்ளது. இதனையடுத்து கிராமத்தினர் ஒன்று கூடி இறந்த காளையின் முன்பு அமர்ந்து கண்ணீர் வடித்து, மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து, தீபாராதனை செய்து, மேள, தாளங்கள் முழங்க அஞ்சலி செலுத்தி வந்துள்ளனர். பின்னர் வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளனர். கிராம மக்களின் காணிக்கை பணத்தை வைத்து இந்த ஏற்பாடுகள் செய்துள்ளனர்.