சத்தீஸ்கர் மாநிலத்தில் உயிரிழந்த முதலைக்காக ஒரு கிராமமே துக்கம் அனுசரித்த நெகிழ்ச்சிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பேமேடரா மாவட்டம் பாவா மொஹ்டரா கிராமத்தில் உள்ள குளத்தில் முதலை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த முதலையை கங்காராம் என பெயரிட்டு பொதுமக்கள் அழைத்ததுடன் கடவுளுக்கு அடுத்ததாக வழிப்பட்டும் வந்துள்ளனர். இந்தநிலையில் 130 வயதான முதலை கங்காராம் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தது. இதனால் வருத்தமடைந்த கிராம மக்கள், தங்களின் வீடுகளில் உணவு சமைக்காமல் துக்கம் அனுசரித்ததுடன் அனைவரும் ஒன்றிணைந்து முதலையின் உடலை அடக்கம் செய்தனர்.